ரஷியாவில் புதினின் ஆட்சியை கவிழ்க்க முயற்சி - உக்ரைனின் உளவுத்துறை
உக்ரைன் போர் காரணமாக ரஷியா மீது கடுமையான பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டு வருகின்றன. முக்கியமாக ரஷிய செல்வந்தர்களான அலிகார்க்ஸின் சொத்துக்களை உலக நாடுகள் பல முடக்கி வருகின்றன.
இந்த நிலையில் ரஷியாவில் புதினின் ஆட்சியை கவிழ்க்க முயற்சி நடைபெற்று வருவதாக உக்ரைனின் உளவுத்துறை இயக்குனர் கைரிலோவ் தெரிவித்துள்ளார்.
பொருளாதார ரீதியாக கஷ்டத்தில் இருக்கும் அலிகார்ஸ் புதின் அரசை கவிழ்க்க முடிவு செய்துள்ளனர். அவருக்கு பாய்சன் கொடுத்தோ, சாலை விபத்து ஏற்படுத்தியோ, அவருக்கு உடல் ரீதியாக பாதிப்பை ஏற்படுத்தியோ, அரசை கவிழ்க்க ரஷ்ய பணக்காரர்கள் முயன்று வருகிறார்கள். அந்நாட்டின் சக்தி வாய்ந்த நபர்கள் இதற்கான முயற்சிகளை செய்து வருகிறார்கள். எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் ஆட்சியை கவிழ்க்க இவர்கள் முயன்று வருகிறார்கள் என்று உக்ரைனின் உளவுத்துறை இயக்குனர் கைரிலோவ் தெரிவித்துள்ளார்.
மேலும் ரஷ்ய அதிபருக்கு நெருக்கமானவரும், ரஷ்ய உளவுத்துறையின் இயக்குனருமான அலெக்ஸ்சாண்டர் போர்ட்னிகோவை வைத்து ஆட்சியை கவிழ்த்துவிட்டு. அவரை ரஷ்யாவின் அதிபராக பதவியில் அமர்த்த அந்நாட்டு அலிகார்க்ஸ் முயன்று வருகிறார்கள். இதன் மூலம் மேற்கு உலக நாடுகளின் பொருளாதார தடைகளை நீக்கி, மீண்டும் அவர்களுடன் உறவு மேற்கொள்ள முடியும் என்ற நம்பிக்கையில் அலிகார்க்ஸ் இருக்கிறார்கள் என்று உக்ரைனின் உளவுத்துறை இயக்குனர் கைரிலோவ் தெரிவித்துள்ளார்.'
அலிகார்க்ஸ் யார்...?
அலிகார்க்ஸ் தான் ரஷியாவில் அரசை மறைமுகமாக கட்டுப்படுத்த்தி வருகின்றன. அரசின் முடிவுகளை தீர்மானிக்கும் அதிகார மிக்க குழு ஆகும். ரஷியாவின் மிகவும் சக்தி வாய்ந்த குழுவாக அலிகார்க்ஸ் குழு பார்க்கப்படுகிறது.
அலிகார்ஸுக்கு சொந்தமான மாளிகைகள், சொத்துக்கள், தனியார் விமானங்கள் ஆகியவற்றை மேற்கு உலக நாடுகள் முடக்கி வருகின்றன. வெளிநாடுகளில் இவர்கள் சேர்த்து வைத்து இருந்த சொத்துக்கள், வெளிநாட்டு வங்கிகளில் உள்ள இவர்களின் சேமிப்புகளை மேற்கு உலக நாடுகள் முடக்கி வருகின்றன. இதனால் ரஷ்யாவை சேர்ந்த அலிகார்க்ஸ் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கும் பாதிப்பிற்கு உள்ளாகி இருக்கின்றனர்.
இந்த போர் காரணமாகவே அலிகார்க்ஸ் பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளனர். இதையடுத்து போரை நடத்திவரும் புதின் மீது அலிகார்ஸ் சிலர் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் புடின் மீது கோபத்தில் இருக்கும் அலிகார்ஸ், அவரின் ஆட்சியை கவிழ்க்க முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது.