அமைச்சர் மீது காஸ் சிலிண்டர் தாக்குதல்
Mayoorikka
2 years ago
இராஜாங்க அமைச்சர், காஸ் சிலிண்டர் விநியோகிக்கும் கடையொன்றை கடந்து சென்றுக்கொண்டிருந்த போது, அங்கு வரிசையில் நின்றுக்கொண்டிருந்தவர்களில் ஒருவர் காஸ் சிலிண்டரினால், வாகனத்தின் மீது தாக்குதல் நடத்தியுள்ளார்.
இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத், பயணம் செய்துகொண்டிருந்த வாகனத்தின் மீதே, காஸ் சிலிண்டரினால் இவ்வாறு தாக்குதல் நடத்தியுள்ளார்.
இந்த சம்பவம் கேகாலை, ரன்வல சந்தியிலேயே இடம்பெற்றுள்ளது. இதனால், பெரும் பதற்றம் ஏற்பட்டது. எனினும், வாகனத்துக்கு எந்தவிதமான சேதங்களும் ஏற்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.