இரண்டு புதிய 20 ரூபா நினைவு நாணயங்கள் வெளியீடு
Prathees
2 years ago
கொழும்பு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தின் 150வது ஆண்டு நிறைவையும், நாட்டின் முதலாவது சனத்தொகை மற்றும் வீடமைப்புக் கணக்கெடுப்பையும் முன்னிட்டு இரண்டு புதிய 20 ரூபா நினைவு நாணயங்கள் வெளியிடப்படவுள்ளன.
கொழும்பு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் சந்திரிகா எல். விஜேரத்ன மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பி.எம்.பி. அனுரகுமார இன்று (21) ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களுக்கு நினைவு நாணயங்களை வழங்கி வைத்தார்.
மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால், பிரதி ஆளுநர் என்.டி.ஜி.ஆர் தம்மிக்க நாணயக்கார, நிதி அத்தியட்சகர் கே.எம் அபேகோன் அவர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டார்.