பயங்கரவாதத் தடுப்பு தற்காலிக ஏற்பாடுகள் திருத்தச் சட்டமூலத்தின் 2ஆம் வாசிப்பு மீதான விவாதம் இன்று
#Parliament
#SriLanka
#Lanka4
Reha
2 years ago
பயங்கரவாதத் தடுப்பு தற்காலிக ஏற்பாடுகள் திருத்தச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று இடம்பெறவுள்ளது.
25ஆம் திகதி தவிர ஏனைய அனைத்து நாட்களிலும் முற்பகல் 10 மணி முதல் 11 மணி வரை வாய்மூல விடைக்கான கேள்விக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இன்று நாடாளுமன்றம் முற்பகல் 10 மணிக்குக் கூடவிருப்பதுடன் முற்பகல் 11 மணி முதல் பிற்பகல் 4.30 மணி வரை பயங்கரவாதத் தடுப்பு தற்காலிக ஏற்பாடுகள் திருத்தச் சட்டமூலத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான விவாதம் நடைபெறும் என நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் அறிவித்துள்ளது.
அத்துடன் நாளைய தினம் முற்பகல் 11 மணி முதல் மாலை 4.30 வரை காணி அபிவிருத்திக் கட்டளைச் சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட சில வர்த்தமானி அறிவித்தல்கள் மூலம் அறிவிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.