கொழும்பு - பதுளை இடையேயான இரவு நேர தபால் ரயில் சேவை நேற்று மீண்டும் ஆரம்பம்
Prabha Praneetha
2 years ago
318 நாட்களுக்குப் பின்னர் கொழும்பு - பதுளை இடையேயான இரவு நேர தபால் ரயில் சேவை நேற்று மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த ரயில், தூங்கும் வசதிகள் மற்றும் அஞ்சல் அறை வசதிகள் கொண்ட பெட்டிகளுடன் மீண்டும் சேவையில் ஈடுபடும் என்று ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்துடன், அதன் சேவைகள் நிறுத்தப்பட்டிருந்தமையினால், தபால் சேவை நடவடிக்கைகளுக்கும், பூக்கள் உள்ளிட்ட பொதிகள் விநியோக நடவடிக்கைகளுக்கும் தடைப்பட்டிருந்தன .
இன்று முதல் சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.