ஆளும் கட்சியின் இரண்டு விசேட கூட்டங்கள் இன்று!
Mayoorikka
2 years ago
ஆளும் கட்சியின் இரண்டு விசேட கூட்டங்கள் இன்று(22) இடம்பெறவுள்ளன.
அரசாங்கத்தின் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்கும் சந்திப்பு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இன்று மாலை 6 மணிக்கு அலரிமாளிகையில் நடைபெறவுள்ளது.
நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
இதேவேளை, ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று இன்று முற்பகல் 11.30 மணிக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் கூடவுள்ளது.