பேச்சுவார்த்தை தோல்வியுற்றால் மூன்றாம் உலகப்போர் வெடிக்கும்!! உக்ரைன் ஜனாதிபதி அதிரடி!
உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் செலென்ஸ்கி, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராயிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
ஆனால் பேச்சுவார்த்தை தோல்வியுற்றால், இரு நாடுகளுக்கிடையிலான சண்டை மூன்றாம் உலகப் போருக்கு இட்டுச் செல்லலாம் என்று அவர் சி.என்.என் செய்திச் சேவைக்கு அளித்த நேர்காணலில் கூறினார்.
கடந்த 2 ஆண்டுகளாக புட்டினுடன் பேசத் தயாராய் இருந்துவருவதாக செலென்ஸ்கி கூறினார். பேச்சுவார்த்தையின்றிப் போரை நிறுத்த முடியாது என்று அவர் தெரிவித்தார்.
போரை நிறுத்துவதற்கு ஒரு வீதம் வாய்ப்பு மட்டுமே உள்ளது என்று கூறிய அவர், அந்த வாய்ப்பைப் பயன்படுத்த வேண்டும் என்றார்.
உக்ரைன் தினமும் பொதுமக்கள் பலரையும் இழந்துவருவதை அவர் சுட்டிக்காட்டினார்.
“ரஷ்யப் படைகள் நம்மை அழித்து ஒழிக்க வந்திருக்கின்றன. அதை எதிர்த்துச் செயல்படலாம். தன்மானங்காத்து நடந்துகொள்ளலாம்.
ஆனால் அது மக்களின் உயிர்களைக் காக்க உதவாது” என்று வருந்தினார் செலென்ஸ்கி. முடிந்தவரை போரை நிறுத்தும் முயற்சியில் இறங்குவதே சிறந்தது என்றார் அவர்.