இலங்கையில் எதற்கு பயங்கரவாத தடைச் சட்டம்? நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல கேள்வி
நாட்டில் போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு 10 வருடம் நிறைவடைந்த நிலையில், இன்னமும் பயங்கரவாத தடைச்ச சட்டம் எதற்கு என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல கேள்வி எழுப்பியுள்ளார்.
என்னை கைது செய்தாலும் விசாரணை இல்லாமல் ஒருவருடம் சும்மா வைத்திருப்பார்கள்.
நாட்டிலே இப்படி ஒரு சட்டம் இருப்பது வெட்கம்.அது தான் சர்வதேசத்தின் கேள்விக்கு உட்பட்டு நிற்கின்றோம்.
போர் முடிந்து 10 வருடமாகிறது.அதற்கு பின்னர் அப்படியே தான் சட்டம் இருக்கிறது என்றார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா கருத்து தெரிவிக்கையில்:
40 வருடமாக இது நிலவுகிறது.அதிலே பல விடயங்கள் மாற்றப்பட வேண்டும். இல்லை நீக்கப்பட வேண்டும்.
தேசிய பாதுகாப்பு முக்கியம் ஏற்றுக்கொள்கின்றோம். இது அப்பாவிகளையும் ,ஊடகவியலாளர்களையும் குறிவைக்கிறது.
நீங்கள் அரசியல் பழிவாங்கலுக்காக மட்டுமே அதனை பயன்படுகிறீர்கள்.
ஈஸ்டர் தாக்குதல் குற்றவாளிகளுக்கு பின்னால் செல்கிறீர்கள்- என்றார்.