மின், தண்ணீர் கட்டணம் உயர்வு: அமைச்சரவையில் முடிவு இல்லை

#water #Electricity Bill #prices #SriLanka
Prasu
2 years ago
மின், தண்ணீர் கட்டணம் உயர்வு: அமைச்சரவையில் முடிவு இல்லை

மின்சாரம் மற்றும் தண்ணீர் கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில் அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்படவில்லை என்று அமைச்சரவை இணைப்பேச்சாளரும் அமைச்சருமான ரமேஷ் பத்திரண தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு இன்று அரச தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. இதன்போதே அமைச்சர் இந்தத் தகவலை வெளியிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

"மின்சாரம் மற்றும் தண்ணீர் கட்டணங்களை அதிகரிப்பது தொடர்பில் அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துரையாடப்படவில்ல. எனினும், ரயில் கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில் கடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டது" - என்றார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!