இலங்கையில் இருந்து மீண்டும் இந்தியா நோக்கி அகதிகள்!
Mayoorikka
2 years ago
இலங்கையில் இருந்து ஆறு பேர் அகதிகளாக இந்தியாவில் அடைக்கலம் கோரியுள்ளதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்தியாவில் தமிகத்தின் தனுஷ்கோடி அரிச்சல்முனை கடல் பகுதிக்கு அருகே உள்ள மணல் திட்டில் இலங்கையைச் சேர்ந்த 6 பேர் இவ்வாறு வந்து இறங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதில் ஒரு ஆணும் 2 பெண்களும் 3 குழந்தைகளுமே கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன்,அவர்களை இந்திய கடலோர காவல் படையினர் கரைக்கு கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளாதாக தெரிவிக்கப்படுகின்றது.