பாதுகாக்கப்படாத காடுகள் தொடர்பில் நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவு

Mayoorikka
2 years ago
பாதுகாக்கப்படாத காடுகள் தொடர்பில் நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவு

பாதுகாக்கப்படாத காடுகளை பிரதேச செயலாளரின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் வகையில் வௌியிடப்பட்ட சுற்றுநிருபத்திற்கு அமைய செயற்பட வேண்டாம் என காணி ஆணையாளர் நாயகத்திற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த சுற்றறிக்கையை சவாலுக்கு உட்படுத்தி, சுற்றுச்சூழல் கேந்திரம் தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு அழைக்கப்பட்டது.

குறித்த சுற்றுநிருபத்தை ஆட்சேபித்து தாக்கல் செய்யப்பட்ட எழுத்தாணை மனு தொடர்பில் விடயங்களை முன்வைக்க எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதலாம் திகதி மன்றில் ஆஜராகுமாறு காணி ஆணையாளர் நாயகம், வன பாதுகாப்பு ஆணையாளர் நாயகம் உள்ளிட்ட 5 பேருக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் இன்று (22) பிறப்பிக்கப்பட்ட உத்தரவு எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதலாம் திகதி வரை செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!