எதிர்காலத்தில் எரிபொருள் விலை குறைக்கப்படும். சேமிப்போர் நட்டம் எதிர்நோக்குவர்.

#SriLanka #Fuel #prices
எதிர்காலத்தில் எரிபொருள் விலை குறைக்கப்படும். சேமிப்போர் நட்டம் எதிர்நோக்குவர்.

எதிர்காலத்தில் நாட்டில் எரிபொருட்களின் விலை குறைவடையும் எனவும், அதற்கமைவாக எரிபொருள் கையிருப்பு உள்ள மக்கள் பாரிய நட்டத்தை அனுபவிக்க நேரிடும் எனவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் இலாபம் ஈட்டி மக்களுக்கு எரிபொருள் விநியோகத்தில் ஏற்பட்ட நட்டத்தை ஈடுசெய்து அரசாங்கம் விரைவில் எரிபொருள் நிவாரணம் வழங்கவுள்ளதாகவும் அவர் கூறினார்.
நாட்டில் தற்போது எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், மக்கள் எரிபொருளை சேகரித்து விற்பனை செய்வதால் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இரண்டு நாட்களுக்கு எரிபொருளாக இருந்த எரிபொருள் பவுசரில் இன்று ஏழு மணித்தியாலங்களில் தீர்ந்துவிடும் எனவும், நாளொன்றுக்கு 50 லீற்றர் எரிபொருளை கொள்வனவு செய்பவர்கள் தற்போது 250 லீற்றர்களை சேகரிக்கின்றனர் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.