அனைத்து ராசிக்குமான இன்றைய ராசி பலன் 23.03.2022

#Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
2 years ago
அனைத்து ராசிக்குமான இன்றைய ராசி பலன் 23.03.2022

மேஷம்
அசுவினி: மற்றவர்களின் எளிய ஆசைகளை நிறைவேற்றுவீர்கள்.
பரணி: வெளியூர், வெளிநாட்டுப் பயணங்கள் ஏற்பாடாகும்.
கார்த்திகை 1: பிள்ளைகளுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும்.

ரிஷபம்
கார்த்திகை 2,3,4: முன்பைவிட செலவுகள் கட்டுக்குள் இருக்கும்.
ரோகிணி: வீடு கட்ட நீங்கள் எதிர்பார்த்த கடன் கிடைக்கும்.
மிருகசீரிடம் 1,2: புகழ் கூடும். கல்வி வகையில் செலவுகள் உண்டாகும்

மிதுனம்
மிருகசீரிடம் 3,4: கணவன்- மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும்.
திருவாதிரை: நடக்காது என்று நினைத்த விஷயங்கள் இன்று கூடிவரும்.
புனர்பூசம்: 1,2,3: இளைஞர்களுக்கு மகிழ்ச்சியான சூழல் உருவாகும்.

கடகம்
புனர்பூசம் 4: பாதியில் நின்ற வேலைகள் இன்று முடியும். வியாபார போட்டிகள் குறையும்.
பூசம்: மேலதிகாரி கனிவுடன் நடந்து கொள்வார். கவலை தீரும்.
ஆயில்யம்: பெற்றோரிடம் பணிவு தேவை. நண்பர்கள் உதவி செய்வர்.

சிம்மம்
மகம்: நல்ல செயல்களை செய்து மகான்களின் அன்பை பெறுவீர்கள்.
பூரம்: தாயாரிடம் அன்பாக இருந்து அவரின் ஆசியைப் பெறுவீர்கள்.
உத்திரம்1: அரசாங்க வகையில் நன்மை உண்டு. பிள்ளைகள் முன்னேறுவர்.

கன்னி
உத்திரம்2,3,4: பிரச்னை தீரும். பலம், பலவீனத்தை உணர்வீர்கள்.
அஸ்தம்: குடும்பத்தில் திருமணப் பேச்சுவார்த்தை வெற்றியடையும்.
சித்திரை 1,2: வியாபாரிகளுக்கு லாபம் கிடைக்கும். நண்பர்கள் தேடி வருவார்கள்.

துலாம்
சித்திரை 3,4: கலைத்துறையினருக்கு திறமையும் ஆர்வமும் வெளிப்படும்.
சுவாதி: பணியில் கவனத்துடன் செயல்பட்டு இரட்டிப்பு லாபம் பெறுவீர்கள் .
விசாகம் 1,2,3: பணியிடத்தில் சில பொறுப்புகளை உங்களிடம் ஒப்படைப்பார்கள் .

விருச்சிகம்
விசாகம் 4: இளைஞர்களின் முயற்சிகள் வெற்றி பெறும்.
அனுஷம்: பெரியவர்களுக்கு நன்மை செய்து அவரது ஆசியை பெறுவீர்கள்.
கேட்டை: மனதை அரித்துக்கொண்டிருந்த கவலை மறையும்.

தனுசு: 
மூலம்: வார்த்தைகளை அளந்து பேசுங்கள். புது விஷயம் கற்பீர்கள்.
பூராடம்: கோபத்தைக் குறைப்பது நல்லது. எதுவும் நிதானமாக நடக்கும்.
உத்திராடம் 1: குழந்தைகளின் வெளிநாட்டுக் கனவு நனவாகும்

மகரம்
உத்திராடம் 2,3,4: உங்கள் வார்த்தைக்கு மதிப்புகூடும். நிதானமான நாள்.
திருவோணம்: அரசாங்க விஷயங்களில் அனுகூலம் உண்டு.
அவிட்டம்1,2: வழக்கு மகிழ்ச்சியான தீர்ப்பை நோக்கிச் செல்லும்.

கும்பம்
அவிட்டம் 3,4: மனதில் புதிய பலம் வருவதற்கான தன்னம்பிக்கை கூடும்.
சதயம்: அதிகார நிலையில் உள்ளோர் அறிமுகமாவர். கலகலப்பான நாள்.
பூரட்டாதி1,2,3: சுப நிகழ்வுகளில் இருந்து வந்த தடை, தாமதங்கள் நீங்கும்.

மீனம்
பூரட்டாதி 4: முனைப்புடன் செயல்பட்டுச் சில வேலைகளை முடிப்பீர்கள்.
உத்திரட்டாதி: பிள்ளைகளின் அன்பு கிடைக்கும். உடல் சோர்வு நீங்கும்.
ரேவதி: பணியிடத்தில் உங்களின் பெருமையும், புகழும் பெருகும்.