அனைத்து ராசிக்குமான இன்றைய ராசி பலன் 24.03.2022

#Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
2 years ago
அனைத்து ராசிக்குமான இன்றைய ராசி பலன் 24.03.2022

மேஷம்
அசுவினி: பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்து முன்னேறுவீர்கள்.
பரணி: கையில் பணம் புரளும். புதிய வேலையில் சேருவீர்கள்.
கார்த்திகை 1: குடும்பத்தினருடன் நல்லுறவு மலரும். பயணம் ஏற்பாடாகும்.

ரிஷபம்
கார்த்திகை 2,3,4: புதிய பொறுப்புக்கள், சலுகைகள் கிடைக்கும் நாள்.
ரோகிணி: தந்தையிடம் இருந்து உதவிகள் கிடைக்கும். பரபரப்பான நாள்.
மிருகசீரிடம் 1,2: அலுவலகத்தில் நெருக்கடி நீங்கி நிம்மதி பிறக்கும்.

மிதுனம்
மிருகசீரிடம் 3,4: தொழில் சீராக இருக்கும். முயற்சியில் வெற்றி உண்டு.
திருவாதிரை: சுயதொழில் தொடங்குவீர்கள். வெளிநாட்டுப் பணம் வரும்.
புனர்பூசம் 1,2,3: மேலதிகாரியுடன் இருந்த மோதல் முடிவுக்கு வரும்.

கடகம்
புனர்பூசம் 4: எதிர்த்தவர்கள் விலகுவர். தாயார் மீது அக்கறை தேவை.
பூசம்: கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்த நண்பர்கள் இணைவர்.
ஆயில்யம்: பிள்ளைகளின் செயல்பாடுகளில் முன்னேற்றம் வரும்

சிம்மம்
மகம்: வியாபாரத்தில் லாபம் வரும். உடன்பிறப்புகள் உதவி செய்வர்.
பூரம்: பிரிந்த நண்பர்கள் இன்று இணைவர். குழப்பம் நீங்கி தெளிவடைவீர்கள்.
உத்திரம் 1: வியாபாரத்தில் ஆர்வம் கூடும். மகிழ்ச்சியான நாள்.

கன்னி
உத்திரம் 2,3,4: குடும்பத்தினர் உங்கள் மீது பாசம் காட்டுவர். நன்மைகள் கூடும்.
அஸ்தம்: அரசாங்க விஷயம் அனுகூலமாக முடியும். நிம்மதி கிடைக்கும்
சித்திரை1,2: பெற்றோர்கள் உங்களை புரிந்து செயல்படுவர்.

துலாம்
சித்திரை 3,4: கலகலப்பு அதிகரிக்கும். குழந்தைகள் உங்களை பெருமிதப்படுத்துவர்.
சுவாதி: பணியாளர்களுக்கு திருப்திகரமான நாள். மகிழ்ச்சி கூடும்.
விசாகம்1,2,3: காதலர்களுக்கு நன்மை வரும். லோன் அனுமதி கிடைக்கும்.

விருச்சிகம்
விசாகம் 4: பலநாள் காத்திருந்த விஷயம் இன்று நல்ல முடிவுக்கு வரும்.
அனுஷம்: உங்களின் பேச்சும், செயலும் நேர்மையாக இருக்கும். மகிழ்ச்சி கூடும்.
கேட்டை: தேவையற்ற கற்பனையால் மனக்கலக்கம், பயம் ஏற்படும்.

தனுசு
மூலம்: வெளியிடங்களில் புதிய மனிதர்களிடம் கவனமாக இருக்கவும்.
பூராடம்: இன்று செய்யும் பணியில் கவனத்துடன் செயல்படவும்.
உத்திராடம்1: பொருட்களை கவனமாகப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

மகரம்
உத்திராடம் 2,3,4: குழந்தை பாக்கியம் எதிர்பார்ப்பவர்களுக்கு நற்செய்தி கிடைக்கும்.
திருவோணம்: தேவையற்ற சிறியதொரு மனக்கவலை வந்து போகும்.
அவிட்டம்1,2: நிதானமான செயலால் வரவு அதிகரிக்கும். மகிழ்ச்சி கூடும்.

கும்பம்
அவிட்டம் 3,4: நீங்கள் நினைத்த விஷயம் தடைக்குப் பின் இனிதே நடந்தேறும்.
சதயம்: உங்களின் வாக்குவன்மையால் பொருளாதாரநிலை மேம்படும்.
பூரட்டாதி1,2,3: தாராளமாகச் செலவு செய்து சந்தோஷப்படுவீர்கள்.

மீனம்
பூரட்டாதி 4: பிறரிடம் பேசும் போது நிதானத்தை கையாள்வது நல்லது.
உத்திரட்டாதி: செலவுகளால் நன்மையும் மகிழ்ச்சியும் கிடைக்கும்.
ரேவதி: உடல் நலத்தில் கவனம் தேவை. நிதிநிலை சீராகும் நாள்.