அனைத்து ராசிக்குமான இன்றைய ராசி பலன் 27.03.2022

#Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Reha
2 years ago
அனைத்து ராசிக்குமான இன்றைய ராசி பலன் 27.03.2022

மேஷம்: 
அசுவினி: உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைப்பதால் மகிழ்வீர்கள்.
பரணி: குழந்தைகளால் பெருமை சேரும். ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும்.
கார்த்திகை 1: உறவினர் வகையில் எதிர்பாராத நன்மைகள் ஏற்படும்.

ரிஷபம்: 
கார்த்திகை 2,3,4: கனிவாகப் பேசுவீர்கள். நண்பர்கள் ஆலோசனை தருவர்.
ரோகிணி: வருமானம் போதுமானதாக இருக்கும். கலகலப்பான நாள்.
மிருகசீரிடம் 1,2 : உறவுகளையும், நட்பையும் தக்க வைத்துக்கொள்ளுங்கள்.

மிதுனம் : 
மிருகசீரிடம் 3,4: பேச்சினால் யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம்.
திருவாதிரை: நேர்மையற்ற நபர்களின் தொடர்பை துண்டிப்பீர்கள்.
புனர்பூசம் 1,2,3: புறம் பேசியவர்கள் உங்களை விட்டு விலகுவர்.

கடகம்: 
புனர்பூசம் 4: உங்களின் புகழ் கூடும். திறமையாக செயல்படுவீர்கள்.
பூசம்: பொறுமையுடன் ஒரு செயலில் ஈடுபட்டு வெற்றி அடைவீர்கள்.
ஆயில்யம்: வீடு வாங்கும் முயற்சிகள் வெற்றி பெறும். தெய்வ பலம் அதிகரிக்கும்.

சிம்மம்: 
மகம்: மற்றவர்கள் உங்களைப் பாராட்டிப் பேசுவர். கவலை நீங்கும்.
பூரம்: அரசுப்பணியாளர்கள் மேலதிகாரிகளின் பாராட்டை பெறுவார்கள்.
உத்திரம்1: குடும்பத்தில் மகிழ்ச்சிக்குக் குறைவு இருக்காது.

கன்னி: 
உத்திரம் 2,3,4: பணியாளர்களுக்கு திறமைக்கேற்ற பொறுப்பு கிடைக்கும்.
அஸ்தம்: பெரியோரை பகைத்துக்கொள்ளாதீர்கள். அதுவே உங்களுக்கு நல்லது.
சித்திரை1,2 : தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும். மகிழ்ச்சி ஏற்படும்.

துலாம்: 
சித்திரை, 3,4:. பணியில் இருந்து வந்த சிறு சிறு நெருக்கடிகள் நீங்கும்.
சுவாதி: பணியாளர்கள் வீண் முயற்சிகளை தவிர்ப்பது நல்லது
விசாகம் 1,2,3: கலைத்திறமையை வெளிக்காட்டி பிறரை வியக்க வைப்பீர்கள்.

விருச்சிகம்: 
விசாகம்4: உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்னைகள் நீங்கும்.
அனுஷம்: உங்களின் திறமை அதிகரிக்கும். நல்ல வேலை கிடைக்கும்
கேட்டை: குடும்பத்தினர் இடையே புரிதல் ஏற்படும். மகிழ்ச்சி கூடும்.

தனுசு: 
மூலம்: பணிகளில் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நாள்.
பூராடம்: இன்று எந்தவொரு விஷயம் செய்வதாக இருந்தாலும் கவனம் தேவை.
உத்திராடம் 1: கூடா நட்பால் மனக்கலக்கம், கற்பனை பயம் ஏற்படலாம்.

மகரம்: 
உத்திராடம் 2,3,4: சாப்பிட, துாங்க நேரமின்றி கூடுதலாக உழைப்பீர்கள்.
திருவோணம்: எதையும் பொறுமையோடு சமாளிப்பீர்கள். மனதைரியம் கூடும்.
அவிட்டம்1,2: கலகலப்பு அதிகரிக்கும். உதவி செய்து பிறரை மகிழ்விப்பீர்கள்.

கும்பம்: 
அவிட்டம் 3,4: தாயின் உடல் ஆரோக்கியத்தில் எச்சரிக்கை தேவை.
சதயம்: பணியிடத்தில் தேவையற்ற வாக்குவாதத்தைத் தவிர்க்க வேண்டும்.
பூரட்டாதி1,2,3: நல்ல செய்தி தேடிவரும். உங்களின் செல்வாக்கு அதிகரிக்கும்.

மீனம்: 
பூரட்டாதி 4: உங்கள் செயல்பாடுகளில் வெற்றி கிடைக்கும். மகிழ்ச்சி கூடும்.
உத்திரட்டாதி: எண்ணங்கள் எளிதில் நிறைவேறும். நிம்மதி கிடைக்கும் நாள்.
ரேவதி: திறமை அதிகரிப்பதால் எடுத்த முயற்சியில் வெற்றி பெறுவீர்கள்.