இலங்கையில் தொடரும் மர்மம் -முல்லைத்தீவு பெற்றோரினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கை!

#SriLanka
Nila
2 years ago
இலங்கையில் தொடரும் மர்மம் -முல்லைத்தீவு பெற்றோரினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கை!

முல்லைத்தீவில் காணாமல் போன மாணவனை கண்டுபிடித்து தருமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு – உண்ணாப்புலவு பகுதியினை சேர்ந்த 16 அகவையுடைய பாடசாலை மாணவன் ஒருவர் வீட்டை விட்டுவெளியேறி கடந்த 10 நாட்களுக்கு மேலாக காணாத நிலையில், பெற்றோரினால் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் தெரியவருகையில்,

முல்லைத்தீவு மகாவித்தியாலயத்தில் க.பொ.த சாதாரண தரத்தில் கல்விகற்றுவரும் உண்ணாப்புலவு முல்லைத்தீவினை சேர்ந்த கே.சானுயன் என்ற சிறுவன் 17.03.2022 அன்று மாலைநேர கல்விக்காக மாலை 6.00 மணிக்கு வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்

28.03.2022 திகதி வரையும் இவர் வீடு திரும்பாத நிலையில் வீட்டார் அச்சமடைந்துள்ளனர்.

இதையடுத்து, இவரின் தொடர்புகள் அற்ற நிலையிலும் இவரினை தேடி கண்டுபிடித்து தருமாறு பெற்றோர்களால் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் இன்று முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் இந்த மாணவனை அறிந்தவர்கள் அல்லது தெரிவிந்தவர்கள் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கோ அல்லது 0775690671தொலைபேசி இலகத்திற்கோ அறியத்தருமாறு மேலும் கேட்டுக்கொண்டுள்ளார்கள்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!