தாயிடம் கோபித்துக்கொண்டு இசை நிகழ்ச்சி பார்க்கச் சென்ற சிறுமி கூட்டு பலாத்காரம்

Prathees
2 years ago
தாயிடம் கோபித்துக்கொண்டு இசை நிகழ்ச்சி பார்க்கச் சென்ற  சிறுமி கூட்டு பலாத்காரம்

 தாயுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வீட்டை விட்டு வெளியேறி  இசை நிகழ்ச்சி நடக்கும் இடத்தில் தங்கியிருந்த போது பாடசாலை மாணவி ஏமாற்றப்பட்டு, பத்து நாட்கள் வலுக்கட்டாயமாக பல்வேறு இடங்களில் கொண்டு சென்று  கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கெக்கிராவ மற்றும் இபலோகம பொலிசார் குறித்த சம்பவம் தொடர்பாக  சந்தேகத்தின் பேரில் எட்டு சந்தேக நபர்களை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்தினர்.

சம்பவத்திற்கு உதவியதாக கூறப்படும் ஹோட்டல் முகாமையாளர்.உட்பட எட்டுப்பேரையும் ஏப்ரல் 6ம்திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமிக்கு பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

சிறுமியை சட்ட வைத்திய அதிகாரி மற்றும் விசேட மனநல மருத்துவர் முன்னிலையில் ஆஜர்படுத்தி உரிய மருத்துவ அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு கெக்கிராவ நீதவான் நீதிமன்றத்தின் சிரேஷ்ட நன்னடத்தை அதிகாரிக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

சிறுமி துஷ்பிரயோகத்துடன் தொடர்புடைய ஏனைய சந்தேகநபர்கள் அனைவரையும் உடனடியாக கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கெக்கிராவ மற்றும் இப்பலோகம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கு பதில் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட பெண் கடந்த 14ம் திகதி தனது தாயாருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தால் வீட்டை விட்டு ஓடியுள்ளார்.

புறநகர் பகுதியில் ஒரு கச்சேரி நடைபெறும் இடத்தில் குறித்த சிறுமி தங்கியிருந்தபோது  சந்தேக நபர்கள் பலர் அவளை ஏமாற்றி அப்பகுதியில் இசை நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு அழைத்துச் சென்று கூட்டு வன்புணர்வு செய்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

சுமார் பத்து நாட்களாக சிறுமியை வலுக்கட்டாயமாக தடுத்து வைத்து,  பல பகுதிகளில் உள்ள ஹோட்டல்கள் மற்றும் வீடுகளில் வைத்து பலவந்தமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளைஇ கற்பழிப்புச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் குழுவொன்றை கைது செய்வதற்கான விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.