கொவிட் சிகிச்சை நிலையங்களில் மோசடி : உடனடியாக விசாரிக்குமாறு பிரதமர் பணிப்புரை

Mayoorikka
2 years ago
கொவிட் சிகிச்சை நிலையங்களில் மோசடி : உடனடியாக விசாரிக்குமாறு  பிரதமர் பணிப்புரை

யாழ்ப்பாணம் கொவிட்  சிகிச்சை நிலையங்களில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் மோசடிகள் தொடர்பில் உடனடி விசாரணைகளை முன்னெடுக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ பணிப்புரை விடுத்துள்ளார்.

வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவிற்கு பிரதமரால் இந்த பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக பிரதமரின் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

யாழ். மாவட்டத்தில் அமைக்கப்பட்ட மூன்று தற்காலிக சிகிச்சை நிலையங்களில் காணப்பட்ட பல இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்கள் காணாமற்போயிருந்தமை கணக்காய்வு அறிக்கையில் அம்பலமாகியதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 வட மாகாண சுகாதார அமைச்சு மற்றும் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆகியோரின் கண்காணிப்பில் இந்த கொரோனா சிகிச்சை நிலையங்கள் செயற்பட்டு வந்தன.

வட மாகாண சுகாதார சேவைகள் பணிமனையில் பல ஊழல் மோசடிகள் இடம்பெற்று வருகின்றமை குறித்து குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதாகவும் பிரதமரின் ஊடகப் பிரிவினால் வௌியிடப்பட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.