இலங்கை முழுவதும் இன்று இருளில் மூழ்கும் அபாயம்! வெளியாகிய அறிவிப்பு

Nila
2 years ago
இலங்கை முழுவதும்  இன்று இருளில் மூழ்கும் அபாயம்!  வெளியாகிய  அறிவிப்பு

நாடளாவிய ரீதியில் இன்றைய தினம் 13 மணித்தியாலங்கள் மின்விநியோகத்தடை அமுல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த போதிலும் குறித்த காலப்பகுதி அதிகரிக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி இன்று 15 மணித்தியாலங்கள் மின்விநியோகத்தடை அமுல்படுத்தபடுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் இன்றைய தினம் முழுவதும் மின்வெட்டு ஏற்படலாம் எனவும் தெரியவந்துள்ளது.

களனி திஸ்ஸ மின் உற்பத்தி நிலையத்தின் டீசல் மின் பிறப்பாக்கி செயலிழந்துள்ளதன் காரணமாக இவ்வாறு மின் தடைக்காலம் அதிகரிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை நாடளாவிய ரீதியில் நுரைச்சோலை அனல்மின் நிலையத்தின் ஊடாக மாத்திரமே மின் விநியோகம் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மின்வெட்டு நடைமுறைப்படுத்தும் விதம் தொடர்பான அட்டவணை இலங்கை பொதுப்பயன்பாடு ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி மின் துண்டிப்பு தொடர்பிலான நடவடிக்கையானது பல்வேறு குழுக்களாக பிரிக்கப்பட்டு கட்டம் கட்டமாக ஒருநாளைக்கு 3 தடவைகள் மின் துண்டிப்பு நடைமுறைப்படுத்தப்படுகிறது.

குழுக்கள் A,B,C,D,E,F

குழுக்கள் G,H,I,J,K,L

குழுக்கள் P,Q,R,S

குழுக்கள் T,U,V,W

குழுக்கள் M,N,O,X,Y,Z