நெருக்கடியின் தீவிரம்: களனிதிஸ்ஸ உள்ளிட்ட அனைத்து அனல் மின் நிலையங்களும் மூடப்பட்டுள்ளன!

Prathees
2 years ago
நெருக்கடியின் தீவிரம்: களனிதிஸ்ஸ உள்ளிட்ட அனைத்து அனல் மின் நிலையங்களும் மூடப்பட்டுள்ளன!

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக இன்று (31) பிற்பகல் நாட்டிலுள்ள அனைத்து அனல் மின் நிலையங்களும் மூடப்பட்டுள்ளதாக மின் பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர். 

சுறுசுறுப்பாக இயங்கி வந்த களனிதிஸ்ஸ அனல்மின் நிலையம் தற்போது முற்றாக செயலிழந்துள்ளதாக இலங்கை மின்சார சபையின் பேச்சாளர் அன்ட்ரூ நவமுனி உறுதிப்படுத்தியுள்ளார். 

ஏனைய டீசல் மற்றும் எரிபொருள் எண்ணெய் மின் உற்பத்தி நிலையங்கள் இன்னும் செயல்படவில்லை என்றார். 

சபுகஸ்கந்த அனல்மின் நிலையத்தில் எரிபொருள் பற்றாக்குறை காரணமாக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், களனி திஸ்ஸ அனல்மின் நிலையத்தின் உற்பத்திப் பணிகளுக்காக 1.5 மில்லியன் மெற்றிக் தொன் டீசல் விடுவிப்பு இன்று பிற்பகல் வேளையில் ஆரம்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின் உற்பத்தி நிலையங்களின் செயற்பாட்டிற்காக 6000 மெற்றிக் தொன் டீசலை வழங்க லங்கா ஐஓசி இணங்கியுள்ளது.

இதற்காக டொலருக்கு பதிலாக ரூபாயை செலுத்த ஒப்புக்கொண்டதாக மேலும் தெரிவிக்கப்பட்டது.