ஏப்ரல் 03 போராட்டம் குறித்து விடுக்கப்பட்டுள்ள முக்கிய வழிகாட்டல்கள்

#SriLanka #Protest
Prasu
2 years ago
ஏப்ரல் 03 போராட்டம் குறித்து விடுக்கப்பட்டுள்ள முக்கிய வழிகாட்டல்கள்

“அமைதியான முறையில் நடைபெறும் போராட்டமே வலுவானதாகவும், மக்கள் மத்தியில் சென்றடைவதாகவும் அமையும்.” – இவ்வாறு முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவால் ஆரம்பிக்கப்பட்ட ‘ரெடிகல் சென்டர்’ எனும் சிவில் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

ஏப்ரல் 03 ஆம் திகதி நடைபெறும் போராட்டம் தொடர்பில் அவ்வமைப்பு விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

போராட்டத்தில் பின்பற்ற வேண்டியவர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டல்களும் அவ்வமைப்பால் வழங்கப்பட்டுள்ளன.

  • போராட்டத்தில் பங்கேற்பவர்கள் தமக்கு அருக்கில் இருப்பவருடன் கலந்துரையாடி அவர் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.
  • அவர்களில் சிலரை தலைமைத்துவத்துக்கு தெரிவுசெய்யவும்.
  • உணர்சிவசப்பட வேண்டாம். அருகில் இருப்பவர்கள் உணர்ச்சி வசப்பட்டால்கூட அவரை இயல்பு நிலைக்கு கொண்டுவரவும்.
  • எவருடைய சொத்துகளையும் சேதப்படுத்தாதீர்கள். போராட்டத்தில் இத்தகைய செயல்களை செய்பவர்கள், போராட்டத்தை காட்டிக்கொடுப்பவர்களாகவே கருதப்படுவார்கள்.
  • மோதல்களை ஏற்படுத்தாதீர்கள். நீங்கள் ஒரு நாகரீக குடிமகன் என்பதையும், அரசாங்கம் முரட்டுத்தனமாக நடந்து கொள்கிறது என்பதையும் உதாரணத்தின் மூலம் காட்டுங்கள்.
  • உங்களை சூழ இருப்பவர்கள் தொடர்பில் விழிப்பாகவே இருங்கள், ஏதேனும் சந்தேகம் இருப்பின், தலைமைத்துவத்துக்கு தெரியப்படுத்தவும்.