கலவரத்தை ஏற்படுத்தும் செயல்பாடுகளுக்கு நாம் எதிர்க்காலத்திலும் அனுமதிக்கப்போவதில்லை: சரத் வீரசேகர

Prabha Praneetha
2 years ago
 கலவரத்தை ஏற்படுத்தும் செயல்பாடுகளுக்கு நாம் எதிர்க்காலத்திலும் அனுமதிக்கப்போவதில்லை: சரத் வீரசேகர

மிரிஹானவில் நேற்றைய தினம் இடம்பெற்ற தாக்குதல் தீவிரவாத குழுவினால் நடத்தப்பட்டதாக வெளியான செய்தியை மறுத்துள்ள பொது பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர, இது நாசகார நடவடிக்கை என தெரிவித்துள்ளார்.

அவர்கள் தீவிரவாதிகள் என்று நான் நினைக்கவில்லை, நாசவேலை மட்டுமே உள்ளது, என்றார்.

பொலிஸ் அமைச்சர் எனும் ரீதியில் இதனை ஏற்றுக் கொள்ள முடியாது. நாட்டில் ஏன் இவ்வாறான பொருளாதாரப் பிரச்சினை ஏற்பட்டுள்ளது என்பதை மக்களும் சிந்திக்க வேண்டும்

மக்களுக்கு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட ஜனநாயக ரீதியாக உரிமையுள்ளது. ஆனால், ஆர்ப்பாட்டம் எனும் போர்வையில் கலவரத்தை ஏற்படுத்தும் செய்பாடுகளுக்கு நாம் எதிர்க்காலத்திலும் அனுமதிக்கப்போவதில்லை.

ஜனாதிபதி இதுவரை எந்தவொரு ஆர்ப்பாட்டத்தையும் எதிர்க்கவில்லை. எதிர்க்காலத்திலும் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடலாம்.

எவ்வாறாயினும் இதுபோன்றதொரு சம்பவத்தை நாம் இனிமேல் பார்த்துக் கொண்டிருக்கப்போவதில்லை. இந்த சம்பவத்திற்கு பொறுப்பான அனைவருக்கு எதிராகவும் நாம் நடவடிக்கை எடுப்போம்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஒருவரேனும் நாட்டுக்கு ஒரு டொலரைக் கொண்டுவந்துள்ளார்களா? – இல்லை. இந்தப் பிரச்சினையைத் தீர்க்க யோசனையை முன்வைத்துள்ளார்களா? – இல்லை. இதுதான் இங்குள்ள பிரச்சினைய

நாட்டின் பிரச்சினையை தீர்க்க துளியளவும் ஒத்துழைக்காத தரப்பினர்தான் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.“ எனத் தெரிவித்துள்ளார்.\