எரிபொருள் மற்றும் மின்சார நெருக்கடி: இரவில் நிறுத்தப்படவுள்ள ATM இயந்திரங்கள்

Prathees
2 years ago
எரிபொருள் மற்றும் மின்சார நெருக்கடி: இரவில் நிறுத்தப்படவுள்ள ATM இயந்திரங்கள்

நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் மற்றும் மின்சார நெருக்கடி காரணமாக வங்கியின் செயற்பாடு பாரிய பிரச்சினையாக மாறியுள்ளதாக இலங்கை வங்கி ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.

மின்சாரம் தடைப்படும் போது வங்கிகள் ஜெனரேட்டர்களை பயன்படுத்தி தங்கள் தொழிலை நடத்துகின்றனஇ ஆனால் அவற்றுக்கான எரிபொருளை பெறுவது பாரிய பிரச்சினையாக மாறியுள்ளது என தொழிற்சங்க செயலாளர் ரஞ்சன் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

எரிபொருள் பற்றாக்குறையால் சில வங்கி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக சங்கத்தின் தலைவர் தெரிவித்தார்.

இரவில் வங்கிகள் மூடப்பட்டிருந்தாலும்  ஏடிஎம் இயந்திரங்கள் செயல்பட வேண்டும் என்றால் தற்போது நிலவும் எரிபொருள் தட்டுப்பாட்டுக்கு சவாலாக உள்ளதாக அவர் கூறினார்.

இதே நிலை நீடித்தால் மின்சாரம் தடைப்படும் போது இயந்திரங்கள் பழுதடையும் என அவர் மேலும் தெரிவித்தார்.

சில வங்கிகள் இரவில் இயந்திரங்களை மூடுவதாக ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.