“கோத்தா வீட்டுக்கு போ” என்று கூறிய நபரை கத்தியால் குத்திய சமாதான நீதவான்

Prathees
2 years ago
“கோத்தா வீட்டுக்கு போ”  என்று கூறிய நபரை கத்தியால் குத்திய சமாதான நீதவான்

இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் ஒருவர் காயமடைந்த நிலையில் பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காயமடைந்தவர் எகொட உயன பகுதியைச் சேர்ந்த 45 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

வாக்குவாதத்திற்குப் பிறகு மன்னா கத்தியால் தாக்கியவர் சமாதான நீதவான் பதவியை வகிக்கும் இவர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் மாநகர சபை உறுப்பினராவார்.

கடந்த 10ஆம் திகதி காலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன்இ “கோத்தா வீட்டுக்கு போ” என ஒருவர் கூறியதால் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

சமாதான நீதவானாக இருந்த முன்னாள் மாநகர சபை உறுப்பினர் அவரை மன்னா கத்தியால் தாக்கியுள்ளார்.

மொரட்டுவைஇ கொரலவெல்ல பிரதேசத்தில் ஹோட்டல் ஒன்றிற்கு அருகாமையில் வீதியில் விருந்தொன்றை அடுத்து இரு குழுக்களுக்கிடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.

தாக்குதலுக்கு இலக்கானவர் 45 வயதுடையவர் என்பதுடன் தற்போது பாணந்துறை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

தாக்குதல் நடத்தியவரைக் கைது செய்வதற்கான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும்இ பாதிக்கப்பட்டவரின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.