ஆர்ப்பாட்டக்காரர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுமா ராஜபக்‌ஷ அரசு....? - எதிர்பார்ப்பில் மக்கள்!

Nila
2 years ago
ஆர்ப்பாட்டக்காரர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுமா ராஜபக்‌ஷ அரசு....? - எதிர்பார்ப்பில் மக்கள்!

கடந்த 9 ஆம் திகதி முதல் 5 நாட்களாக ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கம் பதவிவிலக வேண்டுமென தெரிவித்து கொழும்பு காலிமுகத்திடல் பகுதியில் அமைந்துள்ள ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால்  எழுச்சிப் போராட்டத்தை மக்கள் கொட்டும் மழைக்கு மத்தியிலும் இரவு பகலாக முன்னெடுத்து வருகின்றனர்.

அவர்கள் ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். இந்த கோரிக்கைகள் வெற்றி பெறும் வரை போராட்டத்தை கைவிட தயாராக இல்லை என தெரிவித்து போராட்டத்தை தொடர்ந்து வருவதால் அரசுக்கு என்ன செய்தவதென தெரியாமல் திணறுவதாக அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

மக்கள் போராட்டத்தின் அடிப்படை கோரிக்கைகள்.

01. ஜனாதிபதியும் பிரதமரும் பதவி விலக வேண்டும்.

02. ராஜபக்ஷ குடும்பத்தைச் சேர்ந்த எவருக்கும் பாராளுமன்றத்தில் ஆசனம் வழங்கக் கூடாது.

03. அத்தியாவசிய சேவைகள், நெருக்கடியில் உள்ள விசேட பகுதிகள் (சுகாதாரம்,  கல்வி போன்றவை...) மறுசீரமைப்பதற்காக 19 ஆவது திருத்தத்தை மீண்டும் அமுல்படுத்தி 06 மாதங்களுக்கு இடைக்கால அரசாங்கத்தை உருவாக்குதல்.

04. அனைத்து திருடப்பட்ட பணம் மற்றும் சொத்துக்களை மீட்பதற்காக ஊழல் மற்றும் முறைகேடுகளில் ஈடுபட்டுள்ள ஊழல் அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் உட்பட ராஜபக்ஷ குடும்பத்தின் அனைத்து உறுப்பினர்களுக்கும் எதிராக இடைக்கால அரசாங்கம் அமைக்கவும் செயல்படுத்தவும் மற்றும் சட்ட நடவடிக்கை எடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

05. 06 மாதங்களுக்குள் பாராளுமன்றத் தேர்தலையும் ஜனாதிபதித் தேர்தலையும் நடத்த நடவடிக்கை எடுத்தல்.

இக் கோரிக்கைகளை அரசு நிறைவேற்றுமா என மக்கள் தம் ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்தவண்ணம் உள்ளனர்.