CCC மட்டத்தில் இருந்த இலங்கை தற்போது CC மட்டத்தில்!
Prathees
3 years ago

சர்வதேச கடன் தர மதிப்பீட்டு நிறுவனமான Standard & Poor's இலங்கையின் கடன் தகுதியை மேலும் குறைத்துள்ளது.
அந்த தரவரிசையில் CCC மட்டத்தில் இருந்த இலங்கை தற்போது CC மட்டத்தில் உள்ளது.
இலங்கையின் வெளிநாட்டுக் கடனை இடைநிறுத்தியமையே வீழ்ச்சிக்கான காரணம் என அவர்கள் தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ளனர்.
இன்னும் ஒரு படி கீழே சென்றால், அந்த தரவரிசையில் இலங்கை திவாலாகிவிடும்.
இலங்கையின் கடன் மீளச் செலுத்தும் மீள் கட்டமைப்பு சிக்கல்கள் நிறைந்ததாக அமைந்திருக்கும் என்பதுடன், அதனைப் பூர்த்தி செய்வதற்கு சில மாதங்கள் வரை செல்லலாம் என தரப்படுத்தல் முகவர் அமைப்பு நேற்று (13) வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.



