4 பில்லியன் அமெரிக்க டொலர் தேவை: IMF உடன் பேச்சுவார்த்தையை ஆரம்பிக்க திட்டம்: நிதி அமைச்சர்

Prathees
2 years ago
4 பில்லியன் அமெரிக்க டொலர் தேவை: IMF உடன் பேச்சுவார்த்தையை ஆரம்பிக்க திட்டம்: நிதி அமைச்சர்

இலங்கையின் பொருளாதாரத்திற்கு 4 பில்லியன் அமெரிக்க டொலர்களை பெற்றுக் கொள்வதற்கு சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாடல்களை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சர்வதேச ஊடகமொன்றுடனான நேர்காணலின் போது நிதி அமைச்சர் அலி சப்ரி இதனை தெரிவித்துள்ளார்.

முன்னெப்போதும் இல்லாத பொருளாதார நெருக்கடியில் இருந்து விடுபட இலங்கைக்கு இந்த ஆண்டு 3 பில்லியன் டொலர் முதல் 4 பில்லியன் டொலர்கள் வரை தேவைப்படுவதாகவும், உதவிக்காக சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தைகளை தொடங்கத் திட்டமிட்டுள்ளதாகவும் நிதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் 18 ஆம் தேதி வாஷிங்டனில் பேச்சுவார்த்தைகள் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும், விஷயங்கள் சரியாக நடந்தால், ஒரு வாரம் கழித்து அவசர நிவாரண நிதியை எதிர்பார்ப்பதாகவும் சப்ரி கூறினார்.