சீனாவிடம் இருந்து இரண்டரை பில்லியன் கடன்.. ஒரு பில்லியன் சீன கடனை திருப்பி செலுத்த வேண்டும்..!

சீனாவிடமிருந்து எதிர்பார்க்கப்படும் 2.5 பில்லியன் அமெரிக்க டொலர் கடனை உரிய காலத்தில் திருப்பிச் செலுத்த முடியும் என சீனாவுக்கான இலங்கைத் தூதுவர் கலாநிதி பாலித கொஹொன நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
அதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக சீன அதிகாரிகளால் உறுதியளிக்கப்பட்டதாக வெளிநாட்டு செய்திச் சேவையொன்றுக்கு அவர் தெரிவித்தார்.
சீனாவிடம் இருந்து 2.5 பில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாகப் பெற இலங்கை எதிர்பார்க்கிறது.
அந்தக் கடனில் ஒரு பில்லியன் அடுத்த ஜூலை மாதம் சீனக் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்குச் செலவிடப்பட உள்ளது
மீதமுள்ள 1.5 கடன் வசதியாக எடுத்துக்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
சீனாவுடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்ட நாடான இலங்கை நெருக்கடி நிலையிலும் இலங்கையின் கோரிக்கைக்கு சாதகமாக பதிலளிக்கும் என கலாநிதி பாலித கொஹொன நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இந்த கடனுதவி கிடைக்கும் காலவரையறையை சரியாக கூற முடியாது எனவும் அதற்கு சிறிது காலம் பிடிக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.



