வெற்று தாளில் கையெழுத்திட முடியாது: சுதந்திரக் கட்சி
Prathees
3 years ago

அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை தாக்கல் செய்யப்படுவதென்றால், அனைத்து தரப்பினருடனும் கலந்துரையாடல்களை மேற்கொள்ள வேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது.
ஒரு கட்சியால் நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வர முடியாது என அதன் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
நம்பிக்கையில்லாப் பிரேரணையின் உள்ளடக்கம் தொடர்பில் அனைத்து தரப்பினருடனும் கலந்துரையாடல் நடத்தப்பட வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அப்படி இல்லாமல் வெற்றுத் தாள்களில் கையெழுத்திடத் தயாராக இல்லை என்றார்.
சமகி ஜன பலவேகயவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.



