கடைகள் மூடப்படலாம் - ரணில் எச்சரிக்கை

Prathees
2 years ago
கடைகள் மூடப்படலாம் - ரணில் எச்சரிக்கை

பாராளுமன்ற உறுப்பினர் ரணில் விக்கிரமசிங்க நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில் சமூக வலைத்தளங்களில் விசேட அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தார்.

“நாட்டின் பொருளாதாரம் மற்றும் வீட்டுப் பொருளாதாரம்தான் எங்களின் முக்கியப் பிரச்னைகள்.

எங்களுக்கு உணவு, எரிபொருள், எரிவாயு, உரம், மருந்து கிடைப்பதில் சிக்கல் உள்ளது.

இந்தியாவின் ஒதுக்கீடு மே மாதத்துடன் முடிவடைகிறது. புதிதாக கடன் வாங்குவதை நாங்கள் காணவில்லை.

பின்னர் பொருளாதாரப் பிரச்சனைகள் மோசமடைந்து  வியாபாரக் கடைகள் ஸ்தம்பிக்கும்..

இந்த பாராளுமன்றத்தில் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்.. தேர்தலை நடத்த கால அவகாசம் இல்லை..

எங்களிடம் தொடர்ச்சியான திட்டங்கள் உள்ளன, அவை ஆங்கிலத்தில் உள்ளன ..

உங்களின் கருத்துகளை சபாநாயகருக்கு அனுப்பவும்.. இன்னும் 10 நாட்களில் இந்த யோசனைகள் நமக்குத் தெரிந்ததும் அந்த யோசனைகளை எடுத்து மீண்டும் திருத்தம் செய்து விவாதத்திற்கு சமர்பிக்கலாம். இவர்களின் குரலுக்கு இடம் கொடுக்க வேண்டும். இந்த பொறுப்பை ஏற்று இளைஞர்கள் முன்வருமாறு கேட்டுக்கொள்கிறேன் என அவர் தெரிவித்துள்ளார்.