பதவி விலகத் தயார்: ஜனாதிபதிக்கு அறிவித்த பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள்
Prathees
3 years ago

சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கு இடமளித்து பதவி விலகத் தயார் என ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் அருந்திக பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பெரும்பான்மை உறுப்பினர்களால் இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
முழு அரசாங்கமும் இராஜினாமா செய்ய வேண்டும் என்ற கருத்து உருவாகியுள்ளதாகவும் அதன் காரணமாக பிரதமர் உட்பட அரசாங்கத்தின் அனைத்து உறுப்பினர்களும் இராஜினாமா செய்யத் தயாராக இருப்பதாகவும் ஜனாதிபதியிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமூகக் கருத்துக்குப் புறம்பாக அரசாங்கத்தை செயற்கையாகப் பாதுகாக்க முயற்சிப்பதில் அர்த்தமில்லை எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.



