நாய் கடித்து குடும்பத் தலைவன் உயிரிழப்பு! யாழ்ப்பாணத்தில் சம்பவம்

Mayoorikka
3 years ago
நாய் கடித்து குடும்பத் தலைவன் உயிரிழப்பு! யாழ்ப்பாணத்தில் சம்பவம்

யாழ்ப்பாணம் - பண்டத்தரிப்பில் தெரு நாய் கடிக்குள்ளாகிய குடும்பத் தலைவர் நீர்வெறுப்பு நோய்க்குள்ளாகி உயிரிழந்துள்ளார்.

அவருக்கு விலங்கு விசர் நோய்த்தடுப்பூசி வழங்காது ஏற்பு ஊசி மட்டும் பண்டத்தரிப்பு பிரதேச மருத்துவமனையில் வழங்கப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பண்டத்தரிப்பைச் சேர்ந்த சபாரத்தினம் கனகலிங்கம் (வயது 50) என்பவரே உயிரிழந்துள்ளார்.

பெப்ரவரி 16ஆம் திகதி குடும்பத்தலைவருக்கு தெரு நாய் கடித்துள்ளது. அவர் மறுநாள் காலை பண்டத்தரிப்பு பிரதேச மருத்துவமனைக்கு சிகிச்சை பெறச் சென்றுள்ளார். 

அவருக்கு மருத்துவரின் ஆலோசனையில் ஏற்பு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அவர் நேற்று திடீர் சுகயீனம் காரணமாக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சில மணிநேரங்களில் உயிரிழந்துள்ளார்” என்று மரண விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் விசாரணைகளை முன்னெடுத்தார்.

சடலம் உடற்கூற்றுப் பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!