இன்றைய வேத வசனம் 30.04.2022: இடறல்கள் வருவது அவசியம். ஆனாலும் எந்த மனுஷனால் இடறல் வருகிறதோ, அவனுக்கு ஐயோ
முகம் பார்க்கிற கண்ணாடியைப் பார்த்து ஒரு நிமிடமாவது அழகாக இருக்கின்றனோ.? இல்லையோ.? என முகத்தை சரி செய்யாதவர்கள் இல்லை. குறிப்பாக வாலிப வயதில் இருக்கும் பிள்ளைகள் இதை அதிகமாக விரும்புகிறார்கள்.
முகம் அழகாக இருக்க, சரீரம் அழகாக இருக்க உடை நேர்த்தியாக இருக்க அதிக பணங்கள் மற்றும் நேரங்களை செலவழித்து பிரயாசப் படுகின்றார்கள் வாலிபர்கள். மாத்திரம் அல்ல இதை பெரியவர்களும் விரும்புகிறார்கள் இதை யாரும் மறுக்கவே முடியாது.
ஆனால் பரிசுத்த வேதாகமம் நீதிமொழிகள் 31:30-ல் சௌந்தரியம் வஞ்சனையுள்ளது என்று நம்மை எச்சரிக்கிறது.
அப்படி சௌந்தரியமுள்ள ஒரு ஸ்திரீதான் பத்சேபாள். இவளை வெகு சௌந்திரவதி என்றே வேதம் கூறுகிறது. (சாமுவேல் 11:2)
இதை NLT என்ற ஆங்கில மொழிபெயர்ப்பு வேதத்தில் unusual beauty என்று கூறுகிறது. அதாவது வழக்கத்திற்கு மாறானா அழகு என்று அர்த்தம்.
அதாவது இரண்டு வகையான அழகுள்ளது. ஒன்று வழக்கமான அழகு. தேவன் நம்மை உருவாக்கும் போது கொடுத்த அழகு.
மற்றொன்று வழக்கத்திற்கு மாறான அழகு. செயற்கையாகவே மேக்கப் செய்து வழக்கத்திற்கு மாறாக பெறுவது இதில் தான் ஆபத்து உள்ளது.
தாவீது அவளை பார்த்த உடனே இருதயத்தில் பாவம் செய்ய ஆரம்பித்து விட்டான். தாவீது என்பவன் சாதரண மனிதன் அல்ல அவன் தேவனுடைய இருதயத்திற்கு ஏற்றவன் தேவனை எக்காலமும் துதிப்பவன்.
அவனோ ஒரு பார்வையில் பாவம் செய்து விட்டான். என்றால், அந்த அழகுக்கு பின்னால் எவ்வளவு பெரிய பிசாசு கிரியை இருக்கும் என்று பாருங்கள்.
இன்றய வாலிபர்கள் தான் அழகாக இருக்க வேண்டும் என்றுச்செல்லி செயற்கையான அழகை உருவாக்க விரும்புகிறார்கள். கேட்டால் என் மனது சுத்தமாகா இருக்கிறது என்பார்கள்.
ஆனால், தன் மூலமாய் மற்றவர்கள் இடறுவதை அறியாமல் இருக்கிறார்கள்.
எனவே, வழக்கத்திற்கு மாறான அழகை பெறவதற்காக மேக்கப் போடுவது, பியூட்டி பார்லர் செல்வது இவகைளை குறித்து எச்சரிக்கையாய் இருங்கள்.
எனென்றால், "இடறல்கள் வருவது அவசியம். ஆனாலும் எந்த மனுஷனால் இடறல் வருகிறதோ, அவனுக்கு ஐயோ!" (மத்தேயு 18:7) என்று நம்மை வேதம் எச்சரிக்கிறது.!