காலி முகத்திடலில் 22ஆவது நாளாகவும் தொடரும் மக்கள் எழுச்சிப் போராட்டம்
#Protest
#SriLanka
Prasu
3 years ago

அரசாங்கத்தினை பதவி விலகக் கோரி காலி முகத்திடலில் இளைஞர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட அமைதிப் போராட்டம் இன்று 22ஆவது நாளாக தொடர்கிறது.
கடந்த ஏப்ரல் மாதம் 9 ஆம் திகதி முதல் இரவு பகல் பாராமல் பாரியளவிலான மக்கள் கலந்து கொண்டு போராட்டம் தொடர்வது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, இலங்கையின் அரசியல் கட்டமைப்பில் மாற்றம் கொண்டுவரும் அதேவேளையில் ஜனாதிபதியும் அரசாங்கமும் பதவி விலக வேண்டும் என்று கோரி இன்று (சனிக்கிழமை) நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



