இன்று தொடக்கம் எரிபொருள் போக்குவரத்துக்கான புதிய வழிகாட்டி

#SriLanka #Fuel
இன்று தொடக்கம் எரிபொருள் போக்குவரத்துக்கான புதிய வழிகாட்டி

தடையற்ற எரிபொருள் போக்குவரத்தை உறுதிப்படுத்தும் வகையில் புதிய வழிகாட்டுதல்களை எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர வெளியிட்டுள்ளார்.

தற்போது 40% புகையிரத போக்குவரத்தை கிராமிய டிப்போக்களுக்கு 100% ஆக அதிகரிப்பதற்கும், டிப்போக்களுக்கு தேவையான அனைத்து எரிபொருள் இருப்புகளையும் ரயிலில் கொண்டு செல்வதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

மேலும், இதுவரை பதிவு செய்யப்படாத புதிய வாகனங்களுக்கு ஒரு வாரத்தில் புதிய உரிமம் வழங்கவும், பெட்ரோல் நிலையங்களுக்கு சொந்தமான பவுசர்களுக்கு தனி எரிபொருள் விநியோக முனையம் அமைத்து முன்னுரிமை அளிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

எதிர்வரும் இரண்டு நாட்களுக்குள் சேவைக்கு சமூகமளிக்காத வாகனங்களின் அனுமதிப்பத்திரத்தை இரத்துச் செய்வதற்கும் எதிரே வரும் வாகனங்களுக்கு இடையூறு விளைவிப்பவர்களின் அனுமதிப்பத்திரத்தை இரத்துச் செய்து அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்திற்கு சொந்தமான பௌசர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், வரவிருக்கும் தனியார் வாகனங்களில் நிலையான விலை சூத்திரத்தின் கீழ் தேவையான மாற்றங்களைச் செய்யவும், அவற்றுக்கு தேவையான பாதுகாப்பை வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், தேவையான எரிபொருள் இருப்புக்களை கொண்டு செல்வதற்காக 24 மணிநேரமும் முனையத்தை செயற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.