இடைக்கால சூதாட்டத்தில் ஈடுபட ஐக்கிய மக்கள் சக்தி தயாராக இல்லை.
#SriLanka
#Sajith Premadasa
#Lanka4
Shana
3 years ago

நாட்டை அழித்த ராஜபக்ச அரசு மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுடன் இடைக்கால சூதாட்டத்தில் ஈடுபட ஐக்கிய மக்கள் சக்தி தயாராக இல்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
நேற்று (01) பிற்பகல் கொழும்பு சுதந்திர சதுக்க வளாகத்தில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் முதலாவது மே தினக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஒற்றுமையின் சக்திக்கான சுதந்திரப் போராட்டம் என்ற தொனிப்பொருளில் ஐக்கிய மக்கள் சக்தியின் மே தின அணிவகுப்பு நேற்று (01) பிற்பகல் 2 மணிக்கு பொரளை கெம்பல் மைதானத்தில் ஆரம்பமானது.



