இலங்கையின் பொருளாதார நிலைமையை கருத்தில் கொண்டு நாடாளுமன்றத்தில் கடுமையாகும் கட்டுப்பாடுகள்!

#SriLanka #Parliament
Nila
3 years ago
இலங்கையின்  பொருளாதார நிலைமையை கருத்தில் கொண்டு நாடாளுமன்றத்தில் கடுமையாகும் கட்டுப்பாடுகள்!

நாட்டின் பொருளாதார நிலைமையை கருத்தில் கொண்டு நாடாளுமன்றத்தில் தொலைபேசி பாவனையை மட்டுப்படுத்துமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரம் நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க அனைத்து பிரிவு பிரதானிகளுக்கும் சுற்றரிக்கை ஒன்றை அனுப்ப ஆலோசனை வழங்கியுள்ளார்.

அதற்கமைய, நாடாளுமன்றத்தின் தொலைபேசிகளில் இருந்து தனிப்பட்ட தொலைபேசி அழைப்புகளை பெற வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாக நாடாளுனமன்ற பிரதானிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் மின்சாரம் மற்றும் எழுதுவதற்கு பயன்படுத்தும் பொருட்களின் பாவனையை கட்டுப்படுத்துமாறு நாடாளுமன்ற செயலாளர் பிரதானிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

இதற்கு மேலதிகமாக நாடாளுமன்றத்தில் உணவு வீணாகுவதை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு உணவகப் பிரிவின் தலைவர்களுக்கு செயலாளர் நாயகம் பணிப்புரை விடுத்துள்ளார்.

பொருளாதார நிலை காரணமாக, நாடாளுமன்றத்தில் தினமும் தயாரிக்கப்படும் உணவுகளின் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!