நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்கு விஜயம் செய்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை!
Mayoorikka
3 years ago

இந்தியா – பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் அண்ணாமலை யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் இன்றைய தினம் பூஜை வழிபாடுகளை மேற்கொண்டார்.
அவருடன் யாழிற்கான இந்தியத் துணை தூதர் ராகேஷ் நடராஜ் ஜெயபாஸ்கரன் மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் ஆகியோரும் இணைந்து வழிபாடுகளில் ஈடுபட்டனர்.
ஆலய வழிபாட்டிற்கு பின்னர் நல்லை ஆதீன குரு முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர ஞான சம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளுடன் அண்ணாமலை சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டார்.



