துணை சபாநாயகர் பதவிக்கு எதிர்க்கட்சி வேட்பாளர்.. பெரும்பான்மையை காட்ட தயார்
Mayoorikka
3 years ago

புதிய பாராளுமன்ற பிரதி சபாநாயகரை தெரிவு செய்வதற்கு ஐக்கிய மக்கள் சக்தி கட்சி வேட்பாளரை நிறுத்தவும் தீர்மானித்துள்ளது.
வேட்பாளர் யார் என்பது இன்று தீர்மானிக்கப்படும் என எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 4 ஆம் திகதி பாராளுமன்றத்தில் இதற்கான வாக்கெடுப்பு நடத்தப்படும் எனவும் அன்றைய தினம் ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை காண்பிக்கும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.



