ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்பினர்களால் ஜனாதிபதிக்கு காத்திருக்கும் நெருக்கடி!

Nila
3 years ago
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்பினர்களால் ஜனாதிபதிக்கு காத்திருக்கும் நெருக்கடி!

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்பினர்கள் ஜனாதிபதிக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தும் செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளனர்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் இருந்து சுயாதீனமாக செயற்படுவதாக அறிவித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்வரும் பொதுத் தேர்தலை கருத்திற்கொண்டு புதிய அரசியல் கட்சியொன்றை உருவாக்க தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தற்போதைய அரசாங்கத்தின் சிரேஷ்ட தலைவர் ஒருவரை தலைமைப் பொறுப்பை ஏற்க அழைக்கவுள்ளதாக அந்த குழுவினர் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், தலைவரின் பெயர் இப்போது வெளியிடப்படாது என்று பேச்சாளர் கூறியுள்ளார்.

பொதுஜன பெரமுனவின் பங்காளிக் கட்சிகளான தேசிய சுதந்திர முன்னணி, பிவித்துரு ஹெல உறுமய, புதிய இடதுசாரி முன்னணி மற்றும் ஏனைய கட்சிகள் புதிய அரசியல் கட்சியில் இணைந்து அங்கத்துவம் பெற இணங்கியுள்ளன.

இந்த தீர்மானம் ஜனாதிபதிக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதென கூறுப்படுகின்றது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!