யாழ்.பல்கலைக்கு... இந்தியத்துணை தூதுவர், விஜயம் செய்துள்ளார்.
#SriLanka
#Jaffna
Mugunthan Mugunthan
2 years ago

யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத் தூதுவராலயத்தின் துணைத் தூதுவர் ஜே. ராகேஷ் நட்ராஜ் நேற்று(புதன்கிழமை) யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு மரியாதை நிமித்தமான விஜயமொன்றினை மேற்கொண்டிருந்தார்.
யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜாவை சந்தித்து நிலைமைகளைக் கேட்டறிந்ததுடன் இந்திய அரசாங்கத்தின் அனுசரணையுடன் முன்னெடுக்கப்படும் திட்டங்கள் மற்றும் இந்திய அரசாங்கத்தின் புலமைப்பரிசில்கள் தொடர்பிலும் சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டுள்ளது.



