மும்மூர்த்திகளின் ஆசீர்வாதத்தைப் பெற எதிர்ப்புக்களுக்கு மத்தியில் அனுராதபுரம் சென்ற பிரதமர்

Prathees
2 years ago
மும்மூர்த்திகளின் ஆசீர்வாதத்தைப் பெற எதிர்ப்புக்களுக்கு மத்தியில் அனுராதபுரம் சென்ற பிரதமர்

நாளைய தினம் தனது பதவியை இராஜினாமா செய்யவுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, எதிர்ப்புக்களுக்கு மத்தியில் இன்று அனுராதபுரம் ருவான்வெலி சேயாவிற்கு சென்று ஜய ஸ்ரீ மஹா போதி மற்றும் ஏனைய வழிபாட்டுத் தலங்களுக்கு சென்று வழிபட்டார்.

பிரதமர் வருவதை அறிந்ததும் மூன்று இடங்களில் சிறு எதிர்ப்புகள் ஏற்பட்டதாக தகவல் வெளியானது.

ஸ்ரீ மஹா போதிக்கு அருகில் சுவரொட்டிகளை ஒட்டி பலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 ருவன்வெலி சேயாவிற்கு பாத யாத்திரையின் போது அனுராதபுரத்தில் தொடர்ச்சியாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பலர் ருவன்வெலி சேயாவிற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்திருந்தனர்.

மகிந்த ராஜபக்ச மிரிசவெட்டியவுக்குச் சென்றபோது அங்கு மீண்டும் ஒரு எதிர்ப்பு கிளம்பியது.

ஜய ஸ்ரீ மஹா போதிக்கு முன்பாக சமய அனுஷ்டானங்களை மேற்கொண்ட பின்னர், ருவான்வெலி மஹா சேயாவின் பிரதம குருவான பல்லேகம ஹேமரதன தேரர் அவரை சந்தித்தார்.

அதன்பின்னர் பிரதமர் ஆசிர்வாதம் பெறுவதற்காக மிரிசவெட்டிய ஆலயத்திற்குச் சென்றார்.

மிரிசவெட்டிய சைத்திய பீடாதிபதி கலாநிதி எத்தலவெதுனவெவ ஞானதிலக நாயக்க தேரர் அவரை சந்தித்து ஆசி பெற்றதாக பிரதமரின் ஊடகப் பிரிவுதெரிவித்துள்ளது.

அநுராதபுரத்தில் பிரதமரின் சமய வழிபாடுகளின் போது விகாரைகளை தரிசிக்க வந்த பக்தர்கள் பிரதமரை அணுகி சுமுகமான உரையாடலில் ஈடுபட்டதாகவும் பிரதமரின் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.