பொது ஆலோசனைக்கான அரசியலமைப்பின் 21வது திருத்தம்

#SriLanka #Parliament
பொது ஆலோசனைக்கான அரசியலமைப்பின் 21வது திருத்தம்

அரசியலமைப்பின் 21வது திருத்தத்திற்கான பிரேரணைகள் பாராளுமன்ற இணையத்தளத்தில் மக்கள் பாவனைக்காக வெளியிடப்பட்டுள்ளன.

இலங்கை நாடாளுமன்றம் அறிக்கையொன்றில் இதனைத் தெரிவித்துள்ளது.

21ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் அண்மையில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் சமகி ஜன பலவேவ மற்றும் சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினர்களின் சார்பில் கையளிக்கப்பட்ட இரு அவைகளின் சட்டமூலங்களை நாடாளுமன்ற இணையத்தளத்திலிருந்து மும்மொழிகளிலும் பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும்.

சமகி ஜனபலவேகயவின் பாராளுமன்ற உறுப்பினர் திரு.ரஞ்சித் மத்தும பண்டார மற்றும் 40 சுயேட்சை பாராளுமன்ற உறுப்பினர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர் திரு.விஜேதாச ராஜபக்ஷ ஆகியோர் சபாநாயகரிடம் தனிப்பட்ட சட்டமூலங்களை கையளித்தனர்.

19ஆவது திருத்தச் சட்டத்தை 21ஆவது திருத்தச் சட்டத்தில் திருத்தங்களுடன் கொண்டுவருவதற்கு கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழுவின் அண்மையில் கூடிய கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

இதன்படி, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, இது தொடர்பான யோசனைகளை சமர்ப்பிக்குமாறு அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கு பணிப்புரை விடுத்தார்.

இதுவரை கிடைக்கப்பெற்ற சட்டமூலங்களில் உள்ள முன்மொழிவுகளின் அடிப்படையில் அரசியலமைப்பு திருத்தத்தை அரசாங்கம் கொண்டு வரவுள்ளதுடன், இந்த சட்டமூலங்கள் மேலதிக நடவடிக்கைகளுக்காக தற்போது சட்டமா அதிபரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.