இலங்கை தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்தின் முக்கிய அறிவிப்பு!

Mayoorikka
2 years ago
இலங்கை தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்தின் முக்கிய அறிவிப்பு!

இலங்கையுடன் தொழில்நுட்ப மட்டத்திலான கலந்துரையாடல்களை தொடர்ந்து முன்னெடுப்பதாக சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது. அதனூடாக புதிய அரசாங்கம் நிறுவப்பட்டதும், கொள்கை மட்டத்திலான கலந்துரையாடல்களை முன்னெடுக்கக்கூடியதாக இருக்கும் எனவும் அறிவித்துள்ளது.

“எமது மெய்நிகர் சந்திப்புகள் மே மாதம் 9 முதல் 23 வரை இடம்பெறுவதுடன், தொழில்நுட்ப மட்டத்திலான கலந்துரையாடல்கள் ஆரம்பமாகியுள்ளன. திட்டமிட்டதைப் போன்று தொடர்ந்து கலந்துரையாடல்கள் இடம்பெறும் என்பதுடன், புதிய அரசாங்கம் நிறுவப்பட்டதும் கொள்கை மட்டத்திலான கலந்துரையாடல்களை முன்னெடுக்க முழுமையாக தயார் நிலையில் இருக்க முடியும்.” என சர்வதேச நாணய நிதியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையில் தற்போது நிலவும் சூழ்நிலை தொடர்பில் நிதியம் கவனம் செலுத்துவதாகவும், சமூக வன்முறைகள் தொடர்பில் கரிசனை கொண்டுள்ளதாகவும் அறிவித்துள்ளது.

“சர்வதேச நாணய நிதியத்தின் கொள்கைகளின் பிரகாரம் இலங்கைக்கு உதவிகளை வழங்க எம்மை அர்ப்பணித்துள்ளோம்” எனவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.