DIG தேசபந்து தென்னக்கோனிடம் குற்றப் புலனாய்வு திணைக்களம் சுமார் 10 மணிநேரம் வாக்குமூலம்

Reha
2 years ago
DIG தேசபந்து தென்னக்கோனிடம் குற்றப் புலனாய்வு திணைக்களம் சுமார் 10 மணிநேரம் வாக்குமூலம்

மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் தேசபந்து தென்னக்கோனிடம், குற்றப் புலனாய்வு திணைக்களம் சுமார் 10 மணிநேரம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளது.

கடந்த 9 ஆம் திகதி அலரி மாளிகைக்கு முன்பாகவும், காலிமுகத்திடலிலும் இடம்பெற்ற அமைதியின்மை தொடர்பில் அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

நேற்று பிற்பகல் 3 மணியளவில், குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையான அவர், இன்று அதிகாலை ஒரு மணியளவில் அங்கிருந்து வெளியேறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சனத் நிஷாந்த மற்றும் மிலான் ஜயதிலக்க ஆகியோர் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 9 ஆம் திகதி அலரி மாளிகைக்கு முன்பாகவும், காலிமுகத்திடலிலும் இடம்பெற்ற அமைதியின்மை தொடர்பில் குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் இருவரையும் இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.