காலி முகத்திடலில் முதன்முறையாக முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஷ்டிப்பு! சிங்கள மக்கள் பங்கேற்பு

Mayoorikka
2 years ago
காலி முகத்திடலில் முதன்முறையாக முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஷ்டிப்பு! சிங்கள மக்கள் பங்கேற்பு

காலி முகத்திடல் கோட்டா கோ கம வில்  முள்ளிவாய்க்கால்' நினைவேந்தல் நிகழ்வு தற்பொழுது இடம்பெற்று வருகின்றது.

இந்த நிகழ்வில் யுத்தத்தில் இறந்த மக்களுக்கு நினைவுச் சுடர் ஏற்றி அஞ்சலில் நிகழ்வுகள் இடம்பெற்றன.

 பிக்குமார் மற்றும் கத்தோலிக்க மதத் தலைவர்கள் உட்பட சிங்கள மக்கள் மற்றும் பல்கலைக்கழக மானவர்கள் என மூவின மக்களும்   இதில் கலந்து கொண்டு இறந்த மக்களுக்காக அஞ்சலி செலுத்தினர்.

கடந்த காலங்களில் இத்தகைய முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் பொதுவாக தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் இலங்கை வடகிழக்கில் மட்டுமே நடத்தப்படும் என்பது மட்டுமல்ல. இதற்கு அரசாங்கத்தின் தீவிர எதிர்ப்பும் இருக்கும். இந்த ஆண்டு அத்தகைய எதிர்ப்புகள் ஏதுமில்லை என்பதுமட்டுமல்ல. வரலாற்றில் முதல் முறையாக தமிழர்கள் - சிங்களர்கள் இணைந்து இந்த நினைவேந்தலை நடத்துகிறார்கள்.

அது நடக்கும் இடமும் மிக முக்கியமானது. தலைநகர் கொழும்பில் ஜனாதிபதி செயலகம் அமைந்துள்ள இந்த காலிமுகத் திடல் பகுதியில் கடந்த காலங்களில் ராணுவ வெற்றிக் கொண்டாட்டங்கள் அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படும். இந்த ஆண்டு கோட்டாபய ராஜபக்ஷவின் ஜனாதிபதி செயலகம் அருகிலேயே முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு நடக்கிறது.