விடுதலைப் புலிகளின் தாக்குதல் குறித்த தகவல்களால் இந்தியப் பெருங்கடலில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

Prathees
2 years ago
விடுதலைப் புலிகளின் தாக்குதல் குறித்த தகவல்களால் இந்தியப் பெருங்கடலில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

விடுதலைப் புலிகளால் இலங்கை மீது தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக  தகவல் கிடைத்துள்ளதாகவும் இந்தியாவுக்கு தப்பிச் செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில்இ கடந்த 17ஆம்  திகதி முதல் இந்தியப் பெருங்கடலில் அதிநவீன கப்பல்கள் மூலம் பாதுகாப்பை இந்தியா மீண்டும் அதிகரித்துள்ளது. 

வடக்கு மக்கள் இந்தியாவுக்குத் தப்பிச் செல்வதைத் தடுப்பதற்காக இந்திய கடற்படை மற்றும் கடலோர காவல்படை வீரர்கள் அப்பகுதியில் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர். அத்துடன்  தாக்குதல் குறித்த தகவலுடன், பாதுகாப்பு கப்பல்களின் எண்ணிக்கை 50 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இவற்றில் முப்பத்தைந்து கப்பல்கள் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான கடற்பரப்பில் நிறுத்தப்பட்டு 24 மணி நேரமும் இயங்குகின்றன.

மேலும், இந்திய கடற்படை மற்றும் இந்திய கடலோர காவல்படையின் ரோந்து படகுகள், ஆளில்லா விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் கடல் மற்றும் மணல் திட்டுகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளன.

இந்நாட்களில் இலங்கையின் வடபகுதியில் இருந்து இந்தியாவிற்கு அகதிகள் தப்பிச் செல்வதைத் தடுக்க இந்தியா கடுமையாக உழைத்து வருவதுடன்இ கடலில் மீன்பிடிக்கும் இரு நாட்டு மீனவர்களையும் உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது.