அமரகீர்த்தியின் படுகொலையானது பாதுகாப்புப் படையின் முன்னாள் உறுப்பினர்கள் இருவர் உட்பட மூன்று பேரின் செயலாகும்!

Prathees
2 years ago
அமரகீர்த்தியின் படுகொலையானது பாதுகாப்புப் படையின் முன்னாள் உறுப்பினர்கள் இருவர் உட்பட மூன்று பேரின் செயலாகும்!

அண்மையில் நிட்டம்புவ பிரதேசத்தில் பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மூவரில் இருவர் பாதுகாப்பு படையில் இருந்து ஓய்வு பெற்றவர்கள் என தெரியவந்துள்ளது.

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ இதனைத்  தெரிவித்துள்ளார்.

பிரதான சந்தேக நபராக 29 வயதான பஸ் சாரதி ஒருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

எம்.பி.யின் மெய்ப்பாதுகாவலராக கடமையாற்றிய பொலிஸ் சார்ஜன்ட்டின் துப்பாக்கி கைது செய்யப்பட்ட நபரிடம் காணப்பட்டதுடன், குறித்த துப்பாகிகி மகசீனும்  அவரிடம் இருந்துள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் அவரது மெய்ப்பாதுகாவலரின் சடலங்கள் மே 9 ஆம் திகதி நிட்டம்புவ மற்றும் வெளியாட்களால் சுற்றிவளைக்கப்பட்ட பின்னர் அவர் தப்பி ஓடி ஒளிந்த கட்டிடம் ஒன்றில் கண்டெடுக்கப்பட்டது.

எம்.பி.யின் மரணம் துப்பாக்கிச் சூட்டுக் காயத்தால் ஏற்பட்டதாகத் தகவல்கள் வந்தாலும், பிரேதப் பரிசோதனையில் அவர் உள் காயங்களால் இறந்தார் என்றும், அவரது உடலில் தோட்டாக் காயங்கள் எதுவும் இல்லை என்றும் தெரியவந்துள்ளது.