நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் கீழ் பயன்படுத்தப்படாத காணிகளில் விவசாயம்!

Mayoorikka
4 years ago
நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் கீழ் பயன்படுத்தப்படாத காணிகளில் விவசாயம்!

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் கீழ் பயன்படுத்தப்படாத காணிகளில் துரிதமாக விவசாயம் செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

முதலீட்டுக்கு பயன்படுத்தப்படாத காணிகளை மீளப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

பயன்படுத்தப்படாத காணிகளில் அப்பகுதிகளுக்குரிய பயிர்களை பயிரிடுவதற்காக பிரதேச செயலாளர்களுடன் கலந்துரையாடல்களை மேற்கொள்ளுமாறும் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 
எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய உணவு நெருக்கடிக்கு தீர்வாக இந்த வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படுவதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4