பொதுஜன பெரமுன மற்றும் பொதுஜன ஐக்கிய முன்னணிக்கு இடையில் விசேட கலந்துரையாடல்

Prathees
4 years ago
பொதுஜன பெரமுன மற்றும் பொதுஜன ஐக்கிய முன்னணிக்கு இடையில் விசேட கலந்துரையாடல்

நாட்டின் தற்போதைய பொருளாதார மற்றும் அரசியல் நிலைமைகள் மற்றும் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவுள்ள உத்தேச அரசியலமைப்பு திருத்தங்கள் தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் பொதுஜன ஐக்கிய முன்னணிக்கு இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்த கலந்துரையாடலில் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு கலந்துகொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுஜன ஐக்கிய முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர் தினேஷ் குணவர்தன, பாராளுமன்ற உறுப்பினர்களான சிசிர ஜயக்கொடி மற்றும் யதாமினி குணவர்தன ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.

எதிர்காலத்திலும் இணைந்து செயற்படுவதற்கு தீர்மானிக்கப்பட்டதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4